லஸ்சா என்னும் வைரஸ் காரணமாக இதுவரை இதுவரை நைஜீரியாவில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் நோய் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் அண்மையில் இந்த நோய்த்தாக்குதலுக்கு உள்ளான, அதிக மக்கள் கொண்ட ஆபிரிக்க நாடாக நைஜீரியா குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வருடத்தின் ஆரம்பத்தில் 80 பேருக்கு லஸ்சா வைரஸ் காய்ச்சல் நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாகவும் அதில் 77 பேருக்கு நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் 21 பேர் உயிரிழந்துள்ளனர் நைஜீரியா நோய் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.
நைஜீரியாவில் உள்ள 36 மாநிலங்களில் 13 மாநிலங்களில்; லஸ்ஸா நோய் தொற்று காணப்படுகிறது எனவும் இது எபோலா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த கொடிய நோய் தொற்று வைரஸ் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. லஸ்சா நோய் தொற்றுக்கு காரணமான மரவள்ளி கிழங்கிலிருந்து தயாரிக்கப்படும் கரி என்ற உணவு வகையை நைஜீரிய அரசு தற்போது தடை செய்துள்ளது. 2016 ஆம் ஆண்டு லஸ்ஸா வைரஸ் தாக்குதல் காரணமாக ஆபிரிக்க கண்டத்தில் 100 பேர் உயிரிழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது