148
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் சொத்துக்களுக்கானதடை நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு உயர் நீதிமன்றம் குறித்த நிறுவனத்தின் மீதான தடையை நீடித்துள்ளது. இந்த நிறுவனத்தின் 24 கணக்குகளை முடக்குவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதன் அடிப்படையில் குறித்த நிறுவனத்தின் 23 கணக்குகள் முடக்கப்பட்டிருந்தன. மேலும் 30 நாட்களுக்கு சொத்து முடக்கம் குறித்த உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கி பிணை முறி கொடுக்கல் வாங்கல்களில் பேர்பச்சுவல் ட்ரஸரீஸ் நிறுவனம் பாரியளவில் மோசடி செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது
Spread the love