குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
தமிழ் மக்கள் மஹிந்த ராஜபக்சவை வெறுக்கவில்லை. ஒரு மாற்றத்தை விரும்பினார்கள் அதனால் மைத்திரியை ஜனாதிபதியாக்கினார்கள். என வலி. தெற்கு பிரதேச சபையில் போட்டியிடும் செல்வராசா சுஜித்தா தெரிவித்தார்.
யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை ஶ்ரீலங்கா பொது ஜன முன்னணியின் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. அதில் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் , இந்த அரசாங்கம் எங்களுக்கு வேண்டாம். நாளொன்றுக்கு 1500 ரூபாய் கூட குடும்பம் நடத்த போதாது உள்ளது. மகிந்தவின் ஆட்சி காலத்தில் , 300 – 500 ரூபாய் நாளொன்றுக்கு போதுமாதனாக இருந்தது. இந்த அரசாங்கம் ஊழல் , பிணை முறி , மோசடி என பேசுகின்றதே தவிர மக்களின் அன்றாட பிரச்சனை தொடர்பில் எதனையும் செய்யவில்லை.
மஹிந்தவை தமிழ் மக்கள் புறக்கணிக்க வில்லை. ஒரு மாற்றத்தை விரும்பினார்கள் அதனால் மைத்திரி பால சிறிசேனாவை ஜனாதிபதி ஆகினார்கள். அதானல் நாம் படும் கஷ்டம் போதும் எனவே மீண்டும் மகிந்தவை ஜனாதிபதி ஆக்க வேண்டும்.
அதற்காக ஜனாதிபதி தேர்தல் வரை காத்திருக்க வேண்டாம். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு அளிக்கும் வாக்குகள் கூடாக உள்ளூராட்சி சபைகளில் இருந்து மாற்றத்தை ஏற்படுத்துவோம் என தெரிவித்தார்.