லிபியாவின் கடலோர பகுதியில் புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்ததில் குறைந்தது 90 பேர் உயிரிழந்திருக்கலாம் என ஐ.நா தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பாகஸ்தானைச் சேர்ந்தவர்கள் என குறித்த விபத்தில் உயிர்தப்பிய லிபியாவைச் சேர்ந்த இருவர் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை பத்து பேரின் உடல்கள் லிபிய கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கி உள்ளதாகவும் அவர்களில் எட்டுப்பேர் லிபியாவைச் சேர்ந்தவர்கள் எனவும் இருவர் பாகிஸ்தானியர்கள் எனவும் குடியேற்றத்துக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது. இத்தாலிக்கு செல்லும் ஆபத்தான பயணத்தை பாகிஸ்தானியர்கள் அதிக அளவில் மேற்கொள்வதாகவும் ஐரோப்பிய கண்டத்தின் தெற்கு பகுதிகளை கடல் வழியாக அடைய நினைப்பவர்களுக்கு லிபியா ஒரு முக்கியப் போக்குவரத்து பாதையாக உள்ளது.
இந்தவருடம் இதுவரை உலகம் முழுவதும் 246 புகலிடக் கோரிக்கையாளர்கள் உயிரிழந்தும் காணமல் போயும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது