குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
பிவிருத்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய பிரஜை ஒருவரின் 11 கோடி ரூபா பணத்தை மோசடி செய்தார் என உதய கம்மன்பில மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு தொடர்பில் வழக்குத் தொடர்ந்து விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த உதய கம்மன்பிலவிற்கு பின்னர் நீதிமன்றம் பிணை வழங்கியிருந்தது. எனினும், வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டிருந்தது.
வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள அனுமதியளிக்குமாறு உதய கம்மன்பில சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றில் கோரியிருந்தார். எதிர்வரும் 21ம் திகதி முதல் 24ம் திகதி வரையில் இந்தியாவிற்கும், டிசம்பர் மாதம் 9ம் திகதி முதல் 20ம் திகதி வரையில் ஜப்பானுக்கும் செல்ல அனுமதிக்குமாறு கோரியிருந்தார். இந்தக் கோரிக்கைக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.ஆர். ஹெய்யன்துடுவ இந்த அனுமதியை வழங்கியுள்ளார்.