குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
தமிழ்ப் பிரிவினைவாதிகளின் தேவைக்கு அமைய புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்படுவதாக ஜே.என்.பி. கட்சியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
முழு வரலாற்றுக் காலத்திலும் தமிழ்ப் பிரிவிணைவாதிகள் விடுத்த பிரிவினைவாத கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றும் வகையில் இந்த அரசாங்கம் அரசியல் சாசனத்தை உருவாக்க உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மிகவும் இரகசியமான முறையில் இந்த கோரிக்கைகள் அரசியல் சாசனத்தில் உள்ளடக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். புதிய அரசியல் சாசனத்தை உருவாக்குவதற்கு இடமளித்தால் எமது எதிர்கால சந்ததியினருக்கு நாடே இல்லாமல் போய்விடும் என குறிப்பிட்டுள்ள அவர் தமிழ் இனவாதிகளின் தேவைகளுக்கு இடமளிக்கப்படக் கூடாது என குறிப்பிட்டுள்ளார். இறுதி அரசியல் சாசனம் வெளியிடப்படும் வரையில் காத்திருக்காது இடைக்கால அறிக்கைகள் வெளியிடப்படும் போதே எதிர்ப்பை வெளியிட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.