லண்டனில் வாகனத்தினை பொதுமக்கள் மீது மோதி தாக்குதல் மேற்கொண்ட டாரன் ஒஸ்போர்ன் (Darren Osborne ) என்பவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 43 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் நள்ளிரவு இரண்டு மசூதிகளில் இருந்து தொழுகை முடித்து வீடு திரும்பிக்கொண்டு இருந்த முஸ்லிம் மக்கள் மீது வாகனத்தினை மோதி தாக்குதல் மேற்கொண்டிருந்தார். இந்தத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன் 9 பேர் காயமடைந்திருந்தனர். இந்தநிலையில் தாக்குதலை மேற்கொண்டதாக டாரன் ஒஸ்போர்ன் என்பவர் கைது செய்யப்பட்டு அவர்மீது வழக்கு தொடரப்பட்டது. இந்தநிலையில் அவர்மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 43 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.