பாகிஸ்தானில் பெஷாவர் அருகேயுள்ள மார்தான் நகரை சேர்ந்த நடன நடிகை சும்பால் கான் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். நேற்று தனது வீட்டில் தனியாக இவர் இருந்தபோது. 3 பேர் அங்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் சும்பால் கானை ஒரு விருந்து நிகழ்ச்சிக்கு தங்களுடன் இணைந்து நடனமாட வேண்டும் என அழைத்தனர்.
அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து, 3 பேரையும் வீட்டை விட்டு வெளியேற்றி கதவை பூட்டிக் கொண்டார். இதனால் கோபம் அடைந்த 3 பேரும் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் நடிகை சும்பால் கானை சரமாரியாக சுட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். பின்னர் கொலையாளிகள் அங்கிருந்து தப்பி சென்றனர்.
இது குறித்து காவற்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுள்ளது. இந்த விசாரணையில் கொலையாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களில் ஒருவர் முன்னாள் காவற்துறை அதிகாரி எனவும், மற்றொருவர் கொல்லப்பட்ட நடிகை சும்பால்கானின் முன்னாள் கணவரான ஜெகாங்கீர் கான் எனவும், மூன்றாமவர் டக்சி ணுட்டுனர் எனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக மார்தான் நகரில் கொடூர சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
2 சிறுமிகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், தற்போது நடிகை சுட்டுக் கொல்லப் ட்டுள்ளார். இந்த 3 வழக்குகளிலும் இன்னும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.