கச்சத்தீவு திருவிழாவுக்கு நாட்டுப் படகில் சென்று வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் ராமேசுவரம் பாரம்பரிய மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்தித்த ராமேசுவரம் பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பு நிர்வாகிகள், ஸ்டாலினிடம் இது தொடர்பான மனுவினை கையளித்துள்ளனர்
கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக கச்சத்தீவு அந்தோணியர் ஆலய திருவிழாவுக்கு தமிழக மீனவர்கள் நாட்டுப் படகில் சென்று வந்தநிலையில் 2014-ம் ஆண்டு முதல் கச்சத்தீவு திருவிழாவுக்கு நாட்டுப் படகில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடையின் மூலம் கச்சத்தீவின் வழிபாட்டு உரிமையையும் தமிழக மீனவர்களிடம் இருந்து பறிக்க இந்திய, இலங்கை அரசுகள் சதி செய்கின்றன. இதை முறியடிக்க பாரம்பரிய மீனவர்கள் கச்சத்தீவு திருவிழாவுக்கு நாட்டுப் படகில் சென்றுவர உரிய நடவடிக்கை எடுக்க உதவ வேண்டும் என குறித்த மனுவில் கோரப்பட்டுள்ளது.