குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
ரஸ்யாவின் தலைநகரம் மொஸ்கோ வரலாறு காணாத பனிப்பொழிவினை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பனிப்பொழிவிற்கான பதிவுகள் ஆரம்பமாகியதிலிருந்து ஒரே நாளில் ஏற்பட்ட அதிகபட்ச பனிப்பொழிவை மொஸ்கோ சந்தித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பனிப்பொழிவு காணரமாக ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த கடுமையான பனிப்பொழிவு காணமாக அந்நகரத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்துள்ளதாகவும் இதனால் அங்கு விமானப் போக்குவரத்தும் முற்றிலும் பாதிப்படைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 15 நாட்களுக்கான சராசரி பனிப்பொழிவு கடந்த சனிக்கிழமை பதிவாகியதாகவும் ஒரே நாளில் பொழிந்த பனியானது கடந்த 1957 ஆம் ஆண்டு பதிவான அதிகூடிய பனிப்பொழிவுக்கான பதிவை முந்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.