குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
துருக்கியின் பிரதமர் ரையிப் எர்டோகன் ( Tayyip Erdogan ) வத்திக்கானுக்கு பயணம் செய்துள்ளார். கடந்த 59 ஆண்டுகளில் முதல் தடவையாகவே வத்திக்கானுக்கு துருக்கியின் பிரதமர் ஒருவர் பயணம் செய்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெருசலேம் விவகாரம் தொடர்பில் துருக்கியின் பிரதமர் எர்டோகன், புனித பாப்பரசர் முதலாம் பிரான்ஸூடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா பிரகடனம் செய்ததனைத் தொடர்ந்து, முரண்பாட்டு நிலைமைகள் நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலின் தலைநகரான ஜெருசலேம் நகரை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டராம்ப் அறிவித்தமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என பாப்பாண்டவரும், துருக்கி பிரதமரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.