குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
தாம் கைது செய்யப்படுவதனை தடுக்கும் முயற்சியில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மத்திய வங்கி பிணை முறி கொடுக்கல் வாங்கல்களில் அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்திய சந்தேக நபர்களில் முதல் சந்தேக நபராக அர்ஜூன் மகேந்திரன் அழையாளப்படுத்தப்பட்டுள்ளார். இந்த நிலையில் தாம் கைது செய்யப்படுவதனை தடுக்கும் நோக்கில் சட்டத்தின் உதவியை அர்ஜூன் மகேந்திரன் நாடி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாட்டுப் பிரஜையான தம்மை இலங்கையில் இடம்பெற்ற சம்பவமொன்றிற்காக கைது செய்ய முடியாது என்ற அடிப்படையில் வாதமொன்றை முன்வைக்கும் முயற்சியில் அர்ஜூன் மகேந்திரன் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிங்கப்பூர் மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் குழுவொன்றுடன் இது குறித்து ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் 15ம் திகதிக் முன்னதாக இலங்கைக்கு வந்து வாக்கு மூலமொன்றை அளிக்குமாறு கொழும்பு கோட்டே நீதிமன்றம் அர்ஜூன் மகேந்திரனுக்கு உத்தரவிட்டுள்ளது.