குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ். காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த குடும்பஸ்தர் ஒருவர் கழுத்தில் பிளேட்டினால் வெட்டி தற்கொலைக்கு முயன்ற நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். குறித்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்று உள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ,
குறித்த குடும்பஸ்தர் மதுபோதையில் தனது மனைவியை தாக்கியுள்ளார். தாக்குதலுக்கு உள்ளான மனைவி யாழ். காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் குறித்த குடும்பஸ்தரை காவல்துறையினர் கைது செய்து , வாக்கு மூலத்தினை பெற்ற பின்னர் காவல்துறை தடுப்பு காவலில் தடுத்து வைத்திருந்தனர்.
அந்நிலையில் தடுப்பு காவலில் இருந்த குடும்பஸ்தர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த பிளேட்டினால் தனது கழுத்தை கீறியுள்ளார். அதனை அவதானித்த தடுப்பு காவலில் இருந்த ஏனையவர்கள் அபாய குரல் எழுப்பினர். அதனை அடுத்து தற்கொலைக்கு முயன்ற குடும்பஸ்தரை காவல்துறையினர் மீட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்