குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் உள்ள முகமாலை பிரதேசத்திற்கு இலங்கைக்கான யப்பானிய தூதரக அதிகாரிகள் சென்றுள்ளனர். இன்று(06) காலை முகமாலை பிரதேசத்திற்கு சென்ற அவர்கள் அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் கண்ணிவெடி அகற்றும் பணிகளை பார்வையிட்டுள்ளனர்
2010 ஆம் ஆண்டு முதல் யப்பான் அரசு இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கான நிதி உதவியை வழங்கி வருகிறது கண்ணி வெடி அகற்றும் பணிகளில் 400 பணியாளர்கள் ஈடுப்பட்டுள்ளனர். இதில் 20 வீதமானவர்கள் பெண்களும் 80 வீதமான ஆண்களும் காணப்படுகின்றனர். 2010ஆம் ஆண்டில் இருந்து ஜப்பான் அரசு நீதி உதவிகள் வழங்கிவருகிறது. சமூகமாக. கண்ணிவெடி அகற்றும் பிரிவினர் 2500 ஏக்கர் அளவு வெடிபொருள் அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்