Home உலகம்மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி இந்தியா, அமெரிக்காவின் உதவியை நாடியுள்ளார்

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி இந்தியா, அமெரிக்காவின் உதவியை நாடியுள்ளார்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நசீட், இந்தியா மற்றும் அமெரிக்காவின் உதவியை நாடியுள்ளார்.   மாலைதீவில் நிலவி வரும் அரசியல் குழப்ப நிலைமைகளுக்கு தீர்வு காண தலையீடு செய்யுமாறு இந்தியா, மற்றும் அமெரிக்காவிடம் நசீட் கோரியுள்ளார்.

ஆளும் கட்சியில் சிறைப் பிடிக்கப்பட்டவர்களை விடுதலை செய்ய இந்தியா உதவியளிக்க வேண்டுமெனவும், தற்போதைய ஆட்சியாளர்களின் கணக்குகளை முடக்குவதற்கு அமெரிக்கா உதவ வேண்டுமெனவும் கோரியுள்ளார். அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு மாலைதீவு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவினை தற்போதைய ஜனாதிபதி அப்துல்லாய யாமீன் ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளார். இதனைத் தொடர்ந்தே மாலைதீவில் அரசியல் பதற்ற நிலைமை உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More