இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். 11-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 7-ம்திகதி முதல் மே 27ம் திகதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறவுள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிவரும் மலிங்காவை ஏலத்தில் எந்த அணியும் எடுக்கவில்லை.
இந்நிலையில் லசித் மலிங்கா, மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் மும்பை அணிக்காக 110 போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் ஐ.பி.எல். தொடரில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையும் அவரையே சேரும். அவர் இதுவரை 149 விக்கெட்கள் எடுத்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மீண்டும் இணைந்து கொள்ள சிறப்பான வாய்ப்பு கிடைத்துள்ளதென தெரிவித்துள்ள மலிங்கா கடந்த 10 ஆண்டுகளாக மும்பை தனது இரண்டாவது வீடாக இருந்து வந்தது எனவும் ஒரு வீரராக, மும்பை இந்தியன்ஸ் அணியுடன் பயணம் செய்துவந்த தான் இப்போது பந்துவீச்சு ஆலோசகராக தொடர உள்ள புதிய பயணத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.