குளோபல் தமிழ் செய்தியாளர்
ஊழல் மோசடிகளுடன் தொடர்புடையவர்களுடன் இணைந்து ஆட்சி நடத்த முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலனறுவையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எந்தவொரு அரசியல் கட்சியைச் சேர்ந்த ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட அரசியல்வாதிகளுடன் இணைந்து ஆட்சியில் நீடிக்க தாம் விரும்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊழல் மோசடிகள் காரணமாகவே 2014ம் ஆண்டில் மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தை விட்டு தாம் வெளியேறியதாகத் தெரிவித்துள்ளார். கடந்த கால அல்லது தற்போதைய ஊழல்வாதிகளுடன் இணைந்து ஆட்சி நடத்தப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.