குளோபல் தமிழ் செய்தியாளர்
சர்வதேச குற்றவியல் நீதிமன்றினால் தேடப்பட்டு வந்த லிபிய கமாண்டர் ஒருவர் இராணுவ காவல்துறையினரிடம் சரணடைந்துள்ளார். பெரும் எண்ணிக்கையிலான மக்களை கூட்டுப் படுகொலை செய்திருந்ததாக லிபிய கமாண்டரான மஹ்மூத் அல் வேர்பாலி ( Mahmoud al-Werfalli ) மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கிழக்கு லிபியாவில் இராணுவ காவல்துறையினரிடம் இவர் சரணடைந்துள்ளார்.
லிபிய தேசிய இராணுவத்தின் மிக முக்கியமான உறுப்பினர்களில் ஒருவராக மஹ்மூத் அல் வேர்பாலி கருதப்படுகின்றார். குறித்த இராணுவ கமாண்டரை கைது செய்வது தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் பிடிவிராந்து உத்தரவு பிறப்பித்திருந்தது. தாம் இராணுவ காவல்துறையினரிடம் சரணடையப் போவதாக காணொளி ஒன்றை மஹ்மூத் அல் வேர்பாலி வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.