Home இலங்கை ரவிகருணாநாயக்கவிடம் நான் காக்கபிடித்தேன் எனும் குற்றச்சாட்டை சுமந்திரன் ஒரு மாதத்துக்குள் நிரூபிப்பாார ?

ரவிகருணாநாயக்கவிடம் நான் காக்கபிடித்தேன் எனும் குற்றச்சாட்டை சுமந்திரன் ஒரு மாதத்துக்குள் நிரூபிப்பாார ?

by admin
ரவிகருணாநாயக்கவிடம் நான் காக்கபிடித்தேன் எனும் குற்றச்சாட்டை சுமந்திரன் ஒரு மாதத்துக்குள் நிரூபிப்பாார ? நிரூபிக்கவிடின் அரசியலை விட்டு ஒதுங்குவாரா ? நான் தயார் ? மணிவண்ணன் சவால்
நான் ரவி கருணாநாயக்கவிற்கு காக்கா பிடித்து எனது வாகனத்தை வரியின்றி இறக்குமாதி செய்ததாக சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். நான் சுமந்திரனுக்கு சவால் விடுகின்றேன் எனது வாகன இறக்குமதி தொடர்பில் நான் ரவி கருணாநாயக்கவிடமோ அல்லது யாரேனும் அமைச்சரிடமோ தொடர்புகொண்டிருந்ததாக ஒரு மாத காலத்துக்குள் சுமந்திரனால் நிரூபிக்க முடியுமா? அவ்வாறு அவர் நிரூபித்தால் நான் இந்த அரசியலில் இருந்து விலகிவிடுகின்றேன். அவரால் இக் குற்றச்சாட்டை நிரூபிக்க முடியவில்லை என்றால் அவர் அரசியலில் இருந்து விலகுவாரா என தமிழ்த் தேசியப் பேரவையின் யாழ் மாநகரசபை முதன்மை வேட்பாளர் சட்டத்தரணி மணிவண்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நேற்று செவ்வாய்கிழமை யாழ்ப்பாணம் கிட்டுபூங்காவில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றியபோதே சுமந்திரன் மணிவண்ணன் வரிசெலுத்தாது வாகனம்  கொள்வனவு செய்ததாகவும் அதற்காக அவர் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் காக்காபிடித்ததாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார். அதற்கு பதிலளித்து இன்று (07.02.2018) புதன்கிழமை கிட்டுபூங்காவில் உரையாற்றியபோதே மணிவண்ணன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு உரையாற்றிய அவர்,
“ நான் யாரிடமும் காக்கா பிடிக்கவில்லை. நான் வரி செலுத்தியே எனது வாகனத்தை இறக்குமதி செய்தேன். இதோ அதற்கான சுங்கத்திணைக்களத்தால் வழங்கப்பட்ட என்னிடம் உள்ளது. இதை யாரும் பார்வையிடலாம். நான் ரூபா 40 இலட்சத்து 70 ஆயிரம் ரூபா வரியினைச் செலுத்தியிருக்கின்றேன்.
நான் ஏப்பிரல் 2017 இல் வாகனம் ஒன்றினை ஜப்பான் நாட்டில் கொள்வனவு செய்திருந்தேன். அதற்கான பணமும் அங்கு செலுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் 2017 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் திகதி அரசாங்கம் திடீரென குறித்த வகை வாகனத்துக்கான வரியினை 50 இலட்சத்தால் அதிகரித்தது. இந்நிலையில் 02.06.2017 அன்று நாம் முன்னர் ஓடர் செய்திருந்த கார் இலங்கைக்கு வந்தடைந்திருந்தது. வழமையாக இவ்வாறு திடீரென வரி அதிகரிப்புச் செய்யப்படும் சந்தர்ப்பங்களில் முன்னராக வாகனங்கள் கொள்வனது செய்யும்போது நடைமுறையிலிருக்கும் வரியினையே அறவிடுவது வழக்கமாக இருந்தது.
எனினும் நான் உட்பட 37 பேருடைய வாகனங்கள் தடுத்துவைக்கப்பட்டு மேலதிக வரி அறவீடு கோரப்பட்டது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட எமது தரப்பினைச் சேர்ந்தவர்கள் வழக்குத் தொடர முற்பட்டபோது வியாபார நோக்கமற்று சொந்தப் பாவனைக்காக வாகனங்கள் கொள்வனது செய்த 26 பேருக்கு முன்னர் பின்பற்றப்பட்ட வரி நடைமுறை ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதில் நான் உட்பட இருவர் தமிழர்கள் ஏனையவர்கள் சிங்களவர்கள். குறித்த 26 பேருக்கும் முன்னர் நடைமுறையில் இருந்த வரிவிதிப்பினை ஏற்றுக்கொள்வதான வர்த்தமானி அறிவித்தலே எங்களுயைட பெயர்களோடு வெளியிடப்பட்டது.
அதனடிப்படையில் நான் ரூபா 40 இலட்சத்து 70 ஆயிரம் ரூபா வரியினைச் செலுத்தி குறித்த வாகனத்தினை பெற்றுக்கொண்டேன். முன்னர் நடைமுறையில் இருந்த வரி நடைமுறையினை ஏற்றுக்கொள்வது என்பது அமைச்சரவை எடுத்த முடிவாகும். அவ் வர்த்தமான அறிவித்தலை வைத்துக்கொண்டே சில தரப்பினர் மக்கள் மத்தியில் போலிப் பிரச்சாரத்தினை மேற்கொண்டுவருகின்றனர். இந்த நடைமுறை தவறான ஒரு செயற்பாடு அல்ல. நான் எனது வாகனத்திற்கான வரியினை நியாயப்படி செலுத்தியிருக்கின்றேன். இது தவறு எனில் இதனை அரசியல் வியாபாரமாக்கும் சுமந்திரன் இதுவரை இதற்கு எதிராக வழங்குத் தெடராதது ஏன்? -என்றார்.
தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் வழங்கும் வாக்குகள் 70 வருடங்களாக தமிழ் மக்கள் நிராகரித்துவந்த ஒற்றையாட்சிக்கு வழங்கும் ஆணையாகவே அது அமையும். அந்த ஆணை தமிழ் மக்களின் அழிவுக்கான அடித்தளமாகவும் அமையும். என தமி ழ்தேசி மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்திருக்கின்றார்.
உள்ளூராட்சி சபை தேர்தலில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை ஆதரித்து நேற்று மாலை நல்லூர் கிட்டு பூங்கா வளாகத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்கண்டவாறு தெரிவித்தார்
இதன்போது மேலும் தெரிவிக்கையில் ,
இடைக்கால அறிக்கையில் மிக தெளிவாக ஒற்றையாட்சி என்பது குறிப்பிடப்பட்டி ருக்கின்றது. ஒற்றையாட்சி என்பதற்கான அடிப்படை இறமை பகிரப்பட முடியாது. அதே வேளை சமஷ்டிக்கான அடிப்படை இறமை பகிரப்பட கூடியது. ஆகவே இடைக்கால அ றிக்கையில் 1ம் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது. இறமை பகிரப்பட முடியாததும், பாரதீனப்படுத்தப்பட முடியாததும் என்று. பின்னர் எப்படி சமஷ்டிக்கான உள்ளடக்கம் இடைக்கால அறிக்கையில் உள்ளது என்பது பெரிய கேள்வி.
இதனை நான் சுமந்திரனிடம் கேட்டேன். அவர் சொல்கிறார் நாங்கள் இறமையை பகிருமாறு கேட்கவில்லை. பிரிக்குமாறே கேட்கிறோமாம். பகிர்வதற்கும், பிரிப்பதற்கும் என்ன வித்தியாசம் உள்ளது?
இதே சுமந்திரன் பின்னர் கூறுகிறார் நாங்கள் இறமையை பகிர்வதை பற்றி கேட்கவில்லை. அதிகாரங்களை பகிர்வதை பற்றியே கேட்கிறோம் என. இப்படிப்பட்ட அரசியல் மோசடிகளை செய்து கொண்டு. 70 வருடங்களாக தமிழ் மக்கள் நிராகரித்த ஒற்றையாட்சிக்கு இன்றைக்கு உள்ளூராட்சி சபை தேர்தல் ஊடாக ஆணை கேட்கிறார்கள்.
பிரித்தானியர்கள் வெளியேறிய பின்னர் உருவான இலங்கையின் 1வது அரசியலமைப்பான சோல்பரி அரசியலமைப்பை எதிர்த்து 50ற்கு 50 கேட்டேம். பின்னர் 1970ம் ஆண்டு வந்த 2வது அரசியலமைப்பை தமிழரசு கட் சி எதிர்த்தது. 1978ல் வந்த 3வது அரசியலமைப்பை தமிழர் விடுதலை கூட்டணி எதிர்த்தது. இப்படி தமிழர்கள் கடந்த 70 ஆண்டுகளாக ஒற்றையாட்சியை எதிர்த்தார்கள்.
போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது தேசிய தலைவர் வே.பிரபாகரனிடம் சர்வதேச நாடுகள் கேட் கின்றன. ஒற்றையாட்சிக்கு இணங்குங்கள் நாங்கள் போரை நிறைவுக்கு கொண்டுவருகி றோம். பின்னர் உங்களை ஒரு பெரிய தலைவராகவும் நாங்கள் அங்கீகரிக்கிறோம் என்று. அப்போதும் தலைவர் அதனை நிராகரித்தார்.
ஒற்றையாட்சியானால் வெறுப்படைந்தே
நாம் ஆயுதப்போராட்டத்தை ஆரம்பித்தேன். இப்போது நான் ஒற்றையாட்சிக்கு இணங் குவது தமிழர்களை அழிப்பதற்கு நானே ஒப்புதல் வழங்குவதற்கு நிகரானது என தேசிய தலைவர் பிரபாகரன் கூறினார். அப்படிப்பட்ட தலைவன் வாழ்ந்த மண்ணில், அப்படிப்பட்ட தலைவன் நடத்திய போரில் தங்கள் உயிர்களை தியாகம் செய்தவர்கள் வாழ்ந்த மண்ணில்,
அவர்கள் மடிந்த மண்ணில் இன்றைக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கட்சி, சிறீலங்கா சுதந்திரக்கட்சி, ஈ.பி.டி.பி, ஜே.வி.பி போன்றவர்கள் ஒற்றையாட்சிக்கு மக்க ளிடம் ஆணை கேட்கிறார்கள். இந்த தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு மக்கள் ஆ ணை வழங்கினால் 70 வருடங்களாக தமிழ் மக்கள் நிராகரித்த ஒற்றையாட்சிக்கு, 70 வருடங்களாக தியாகங்களை செய்து, உயிர்களை தியாகங்கள் செய்து காட்டிய எதிர்ப்புக்கு மாறான ஒன்றாகவே இருக்கும். மேலும் தமிழ் மக்களின் அழிவுக்கான அத்திவாரமாகவும் அது இருக்கும். மேலும் தேர்தல் அறிவிக்கும் வரை 13ம் திருத்தச்சட்டத்தையும், அதன் கீழான மாகாணசபைகள் முறமையினையும் தீர்வாக ஏற்கவேண்டும் என சொன்னவர்கள்.
சுயநிர்ணய உரிமை ஒரு பகல் கனவு என சொன்னவர்கள் இப்போது தமிழ்தேசிய கூட்ட மைப்பு துரோகமிழைக்கிறது. ஒற்றையாட்சியை நிராகரிக்கவேண்டும் என சொல்கிறார்கள். இதற்கு பெயர்தான் சந்தர்ப்ப வாதம். இவர்களையும் மக்கள் நிராகரிக்கவேண்டும். தமிழ்தேசிய மக்கள் முன்னணி தமிழ்தேசிய கூட்டமைப்பில் உள்ளவர்கள் மீதும், அவர்களின் வாகனங்கள் மீதும் பொறாமை கொண்டு அவர்களை விமர்சிக்கவில்லை. இப்போதும் தமிழ்தேசிய கூட்டமைப்பிற்குள் ஊழல்கள் நடப்பதாக சொல்கிறார்கள்.
நாங்கள் அதனை விமர்சிக்கவில்லை. நாங்கள் கொள்கைக்கு மாறான அவர்களுடைய செயற்பாட்டை யே விமர்சிக்கிறோம். 2010ம் ஆண்டு தொடக்கம் தமிழ் தமிழ்தேசிய கூட்டமைப்பு தமிழர்களுக்கு துரோகமிழைக்கிறது.
ஒற்றையாட்சிக்கு இணங்கிவிட்டது, போரின் இறுதியில் நடைபெற்ற இன அழிப்புக்கு நீதி கோராமல் வெறும் ஆட்சி மாற்றத்தையே கோருகிறது என்பதை நாங்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டினோம். அவை இன்று நிதர்சனமாக நடந்து கொண்டிருக்கின்றது. இன அழிப்புக்கான சர்வதேச விசாரணையை தமிழர்கள் கோரி நின்றபோதும் அது உள்ளக விசாரணையுடன் நின்றுவிட்டது.
மஹிந்த ராஜபக்ஷவும், இலங்கை இராணுவமும் காப்பாற்றப்பட்டுவிட்டது. இதனை தமிழ் மக்கள் புரிந்து கொண்டு தமிழ்தேசிய மக்கள் முன்னணிக்கு வாக்களிக்கவேண்டும் என தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More