இந்தியா முழுவதிலும் கடந்த 2017 ஆம் ஆண்டில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 1லட்சத்து.46 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய மத்திய வீதிப் போக்குவரத்து துறை அமைச்சர். நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின்போது எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இநத தகவலை வெளியிட்டுள்ளார். 2016-ம் ஆண்டில் 1லட்சத்து 50 ஆயிரம் பேரும் 2015-ல் 1 லட்சத்து.46 ஆயிரம் பேர் இறந்தள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் உயிரிழந்தவர்களில் 68.6 சதவீதமானோர் 18 முதல் 45 வயது வரையிலானோர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதுபோன்ற வீதி விபத்துக்களை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சு மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.