குளோபல் தமிழ் செய்தியாளர்
போராட்டம் நடத்திய தமிழர்களை கழுத்தறுத்துக் கொள்வேன் என சைகை காட்டிய இலங்கை அரசின் லண்டன் தூதரக பாதுகாப்பு அதிகாரி பிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிர்ப்புக்கள் வலுத்து வருகின்றன. இந்த நிலையில் லண்டனில் உள்ள புலம்பெயர் தமிழர்கள் இவரது இச்செயலுக்காகவும் பிரித்தானியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தியும் போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
தமிழர்களை கழுத்தறுத்துக் கொள்வேன் என சைகையால் காட்டிய பிரிக்கேடியர் பிரியங்கா பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டபோதும் பின்னர் மீண்டும் அவர் அப் பதவிக்கு அமர்த்தப்பட்டார். பிரிக்கேடியர் பிரியங்கா ஒழுக்கமானவர் என்றும் அவருக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுக்க தேவையில்லை என்று இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனநாயக்கா தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசு மற்றும் பிரிக்கேடியர் பிரியங்கவுக்கு எதிராக பல்வேறு புலம்பெயர் அமைப்புக்கள் ஒன்றிணைந்து நடாத்தவுள்ள போராட்டப் பேரணி இலங்கை தூதரகம் முன்பாக 13 Hyde Park Gardens, W2 2LU (Nearest Underground Station: Lancaster Gate, Central Line) ஆரம்பிக்கப்பட்ட கொமன்வெல்த் அலுவலகம் முன்பாக நிறைவடைய உள்ளதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது