குளோபல் தமிழ்ச்செய்தியாளர்..
இராணுவத்தினரால் நடத்தப்பட்டு வரும் பாடசாலைகளை கல்வி அமைச்சிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிறுவர் உரிமைகள் குறித்த குழு இந்த சிபாரிசை முன்வைத்துள்ளது. இலங்கை, குவாத்தமாலா, பனாமா, ஸ்பெய்ன், சீசெல்ஸ், சோலமன் தீவுகள் உள்ளிட்ட 15 நாடுகளின் சிறுவர் உரிமைகள் குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு மீளாய்வு செய்துள்ளது.
இலங்கையில் இராணுவத்தினரால் பராமரிக்கப்பட்டு வரும் பாடசாலைகள், கல்வி அமைச்சிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அத்துடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இலங்கை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டுமென கோரப்பட்டுள்ளதுடன், காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பிலான அலுவலகத்தை முழு அளவில் இயக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.