குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்க அதிகாரிகளை சந்திக்கும் திட்டம் கிடையாது என வடகொரியா தெரிவித்துள்ளது. இன்றைய தினம் தென்கொரியாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாக உள்ளன. இந்தப் போட்டித் தொடரின் போது அமெரிக்க அதிகாரிகளை சந்திக்கும் திட்டம் எதுவும் கிடையாது என வடகொரியா திட்டவட்டமாக அறிவித்துள்ளது. அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டுமென எப்பொழுதும் கெஞ்சியது கிடையாது எனவும் வடகொரியா தெரிவித்துள்ளது.
எவ்வாறெனினும், வடகொரியாவின் உயர்மட்ட பிரதிநிதிகள் தென்கொரியா ஜனாதிபதி உள்ளிட்டவர்களை சந்திக்க உள்னர்.
வடகொரிய ஜனாதிபதியின் சகோதரியான கிம் ஜொங் உன்னின் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர், தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன் (Moon Jae-in )உள்ளிட்டவர்களை சந்திக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது