குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிலிப்பைன்ஸில் இடம்பெற்ற கொலைகள் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணைகளை நடத்த உள்ளது. பிலிப்பைன்ஸின் தற்போதைய அரசாங்கம் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. இந்த நடவடிக்கையின்போது பலரது உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ரீதியில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அத்துடன் ஜனாதிபதி நிகலஸ் மடுரோ பாரியளவில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதாகவும்; குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் மூலம் கடந்த ஆண்டில் மட்டும் 120 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பிலிப்பைன்ஸில் இடம்பெற்று வரும் கொலைகள் தொடர்பில் விசாரணை நடத்தப்படுவதாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.