ஈழ மக்கள் ஜனநாயக கட்சி( ஈபிடிபி)யின் ஊர்காவற்துறை தம்பாட்டி வேட்பாளர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றையதினம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஊர்காவற்துறை தம்பாட்டி பகுதியில் உள்ள குறித்த வேட்பாளரின் வீட்டிற்குள், புகுந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
தாக்குதலில் படுகாயமடைந்த வேட்பாளர் ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் சம்பவம் குறித்து ஊர்காவற்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது