156
வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் பதவியேற்றது முதல் உயர் பதவி வகித்து வந்த உயர் இராணுவ அதிகாரி வாங் பியாங் (Hwang Pyong) பதவி நீக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதிக்கு அடுத்தநிலையில் பதவி வகித்த அவரது அலுவலகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இராணுவத்தினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது சில ஒப்பந்தங்களுக்காக அவர் லஞ்சம் வாங்கியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, வாங் பியாங் பதவி நீக்கப்பட்டுள்ளார். அவரது பணிகளை ராணுவ அமைச்சர் கிம் ஜாங் காக் மேலதிகமாக கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love