Home இலங்கைமக்கள் தீர்ப்பை மதிக்கின்றோம் – திகாம்பரம்

மக்கள் தீர்ப்பை மதிக்கின்றோம் – திகாம்பரம்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் வழங்கிய தீர்ப்பினை மதிப்பதாக என மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் விடுத்திருக்கும் அறிக்கையில் தெரிவித்துள்ளார். நல்லாட்சி அரசாங்கம் பல்வேறு ஜனநாயகப் பண்புகளை நாட்டிற்குள் கொண்டு வந்தது என்பதை மறுப்பதற்கில்லை. எனினும் கடந்தகால ஆட்சியாளர்களின் மோசடிகாரர்களை அம்பலப்படுத்துவதற்கு முன்பதாக தேசிய அரசாங்கத்தின் உள்ளார்ந்த முரண்பாடுகளும் ஒரு சிலரின் ஊழல் மோசடிகளும் நாடளாவிய ரீதியாக மக்கள் மனதில் அதிருப்தியைக் காட்டியுள்ளன. குறிப்பாக பிணை முறி விவகாரம் நாடு தழுவிய ரீதியாக ஐக்கிய தேசியக் கட்சியின் பின்னடைவுக்கு காரணமாகியுள்ளமை புலனாகிறது. மலைநாட்டிலும் இதுவே நிலைமை. தொழிலாளர்கள் தமது ஊழியர் சேமலாப நிதி சூறையாடப்பட்டுவிட்டதான பிரச்சாரத்திற்கு அஞ்சிவிட்டனர் என குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் முடிவுகள் தொடர்பாக அவர் விடுத்திருக்கும் அறிக்கையிலேயே மேற்படி கருத்தினை தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்றாண்டு காலமாக நல்லாட்சி அரசாங்கம் பல்வேறு ஜனநாயகப் பண்புகளை நாட்டுக்குள் கொண்டு வந்திருக்கின்றது என்பதை மறுப்பதற்கில்லை. இந்த தேர்தல் அமைதியான முறையில் இடம்பெற்றமையே அதற்கு பெரும் சான்றாகும். அதேபோல தேசிய அரசாங்கத்திற்குள் இருந்த பனிப்போர் தேர்தல் காலத்தில் வெளிப்பட்டது. அரசாங்கத்துக்குள்ளேயே பல்வேறு விமர்சனங்கள் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அதற்கு ஜனாதிபதியே முன்னிலை வகித்தார் என்று சொல்லலாம். தன்னை தவறற்றவர் எனக் காட்டிக்கொள்வதற்காக அவர் மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளும் ஆளுகின்ற அரசாங்கத்தின் மீது அதிருப்தியை ஏற்படுத்திவிட்டிருக்கின்றது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More