Home இலங்கை“நாங்கள் ஆட்சியைத் தொடர்வோம் விரும்பியவர்கள் கைகோர்க்கலாம்”

“நாங்கள் ஆட்சியைத் தொடர்வோம் விரும்பியவர்கள் கைகோர்க்கலாம்”

by admin


இந்த அரசாங்கம் எதிர்வரும் இரண்டரை காலத்துக்கு தொடர்ந்து இருக்கும் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் மலிக் சமரவிக்ரம கூறியுள்ளார். பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் இரண்டரை ஆண்டுகால இருப்பதனால் அரசாங்கத்தில் மாற்றம் ஒன்று தேவையில்லை எனக் கூறியுள்ள அவர், அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்க விரும்பும் எந்தவொரு கட்சியுடனும் இணைந்து செயற்படுவதற்கு ஐக்கிய தேசிய கட்சி தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர்களும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முடியும் என தெரிவித்த மலிக் சமரவிக்ரம,  நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி அதிகார சபைத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் வாக்கு வீதத்தில் எவ்வித குறைவும் இல்லை என  சுட்டிக்காட்டியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More