Home இலங்கைஐக்கிய தேசியக்கட்சியின் தனி அரசாங்கம் – தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கும்..?

ஐக்கிய தேசியக்கட்சியின் தனி அரசாங்கம் – தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கும்..?

by admin

ஐக்கிய தேசியக்கட்சி தனி அரசாங்கம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாக கொழும்பு அரசியல் மட்டத்தில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சி தனியரசாங்கம் அமைக்கும் பட்சத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரதரவு வழங்குமெனவ தகவல்கள் வெளியாகி உள்ளன. உள்ளூராட்சி மன்றத்தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் காரணமாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கிடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில் நேற்று கூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் இராஜாங்க அமைச்சர்கள் கூட்டம், பாராளுமன்றக் குழுக் கூட்டம் ஆகியவற்றில் ஐக்கிய தேசியக்கட்சி தனியாட்சி அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்புடன் முக்கிய பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More