குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நல்லிணக்கத்தை வலுப்படுத்திக் கொள்ள வேண்டுமென வடகொரியா ஜனாதிபதி கிம் ஜொன் உன் தெரிவித்துள்ளார்.தென் கொரியாவில் நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டித் தொடரில் கிம் ஜொன் உன்னின் சகோதரி கிம் யோ ஜொங் பங்கேற்றுள்ள நிலையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்
ஒலிம்பிக் போட்டித் தொடருடன் ஏற்பட்டுள்ள நல்லிணக்கத்தை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்குமாறு தென்கொரியா விடுத்த அழைப்பு வரவேற்கப்பட வேண்டியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா தயாராக உள்ளது என தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன் தெரிவித்துள்ளார். அணுவாயுத பரிசோதனைகள் தொடர்பில் வடகொரியாவிற்கும் தென்கொரியரிவற்கும் இடையில் கடுமையான முரண்பாட்டு நிலைமை நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.