Home இலங்கைநாடு எதிர்நோக்கும் அசாதாரன நிலை – எதிர்வரும் 48 மணித்தியாலத்திற்குள் ஜனாதிபதி விஷேட உரை….

நாடு எதிர்நோக்கும் அசாதாரன நிலை – எதிர்வரும் 48 மணித்தியாலத்திற்குள் ஜனாதிபதி விஷேட உரை….

by admin

உள்ளூராட்சி மன்றத் தேர்தலையடுத்து அரசாங்கம் தற்போது எதிர்கொண்டுள்ள நிலமை தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு விஷேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.

எதிர்வரும் வௌ்ளிக்கிழமைக்கு முன்னதாக ஜனாதிபதி இவ்வாறு விஷட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறியுள்ளார்.  இதேவேளை எதிர்வரும் 24 முதல் 48 மணித்தியாலத்திற்குள் ஜனாதிபதி தனது விஷேட உரையை நிகழ்த்துவார் என்று அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா கூறியுள்ளார்.

இதேவேளை ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருக்கும் அரசாங்கத்திற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இனிமேல் ஒத்துழைப்பு வழங்கப் போவதில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஏற்கனவே தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More