குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
வரவு செலவுத்திட்டம் உழைக்கும் மக்களை பாதிக்கும் என கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். 2017ம் ஆண்டுக்காக நேற்றைய தினம் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டம், உழைக்கும் மக்களை பாதிக்கும் என குற்றம் சுமத்தியுள்ளார்.
வரி அதிகரிப்பு அனைத்து துறைகளையும் பாதிக்கும் எனவும் இதனால் உழைக்கும் மக்கள் அதிகளவு பாதிப்புக்களை எதிர்நோக்குவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட யோசனை ஆபத்தானது என குற்றம் சுமத்தியுள்ள அவர் அரசாங்கத்தினால் பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்ய முடியாத நிலைமையே இந்த வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.