ஆப்கானிஸ்தானில் இடம்பெறும் போரை பேச்சு வார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வர விரும்புவதாக என்று தலிபான்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 17 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் அரசுக்கு எதிராக தாலிபன்கள் நடத்தி வருகின்ற தாக்குதல்களில் இதுவரை 31 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ள நிலைவயில் அவர்கள் இந்த அறிவிப்பினை விடுத்துள்ளனர்.
அத்துடன் வருடம்தோறும் 7,000 படையினர் கொல்லப்படுவதுடன் பன்னாட்டுப் படைகளுக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டுவருகின்ற நிலையில் தலிபான்கள் அந்த அறிவிப்பினை அறிக்கைஒன்றின் மூலம் தெரிவித்துள்ளனர். 17 வருடங்களாக நடக்கும் போரை நிறுத்த நினைக்கிறோம் எனவும் நாங்கள் ஆப்கான் உள் நாட்டுப் போரை பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதற்கு முன்னுரிமை அளிக்க விரும்புகிறோம் எனவும் குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை தலிபான்களின் இந்த அறிக்கை குறித்து கடுமையாக விமர்சித்துள்ள அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் அண்மையில் அவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் வெளிப்பாடே இந்த அறிக்கை எனத் தெரிவித்துள்ளது