ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி புதிய அரசாங்கம் ஒன்றை அமைத்தால் அதற்கான முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நாராஹேன்பிட்ட, அபயராம விகாரையில் இடம்பெற்ற மத நிகழ்வில் கலந்து கொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம், இந்த அரசாங்கம் தொடர்ந்து இருக்கும் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவிப்பது தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இரண்டு தரப்பினரும் இதனையே கூறுகின்றனர் எனவும் எனினும் இறுதி முடிவு இருப்பது ஜனாதிபதியின் கையில் எனவும் அடுத்த முடிவு இருப்பது தமது கையில் எனவும் தெரிவித்த மகிந்த முதலில் ஜனாதிபதி முடிவெடுக்கட்டும் அடுத்து நாங்கள் எடுப்போம் எனத் தெரிவித்தார். அதேநேரம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தில் இருந்து விலகுமானால் அமைச்சரவையை 30 பேருடன் வரை வரையறுக்க வேண்டும் எனவும் மஹிந்த ராஜபக்ஸ வலியுறுத்தி உள்ளார்.