273
சுகாதார அமைச்சரும், அமைச்சரவையின் இணைப் பேச்சாளருமான டொக்டர் ராஜித சேனாரட்ன பொய்யுரைக்கின்றார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி விலக வேண்டாம் என தாம் ஒரு போதும் கோரவில்லை என குறிப்பிட்டுள் அவர, தொலைபேசி மூலம் தாம் பிரதமருக்கு அழைப்பினை ஏற்படுத்தி பதவி விலக வேண்டாம் என கோரியதாக, சுகாதார அமைச்சர் கூறுவதில் எவ்வித உண்மையும் கிடையாது என குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் பொறுப்புணர்ச்சியற்ற வகையில் பொய்யுரைப்பதனை அமைச்சர் சேனாரட்ன நிறுத்திக்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
Spread the love