கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளின் தலைவர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் தற்போது கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக கொழும்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி செயலகத்தில் இந்தக் கூட்டம் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் உத்தியோகபூர்வ இல்லத்தில மஹிந்த ராஜபக்ஸவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த இரண்டு வௌ;வேறு கலந்துரையாடல்களிலும் தற்போதைய அரசியலில் ஏற்பட்டுள்ள சமநிலையற்ற தன்மை மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பேசப்படுவதாக கொழும்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன.