152
தேசிய அரசாங்கம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதனால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு பதவியில் நீடிக்க தகுதியில்லை என பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். தேசிய அரசாங்கம் இல்லாத காரணத்தினால் ஜனாதிபதியினால் புதிய பிரதமர் ஒருவரை நியமிக்கத் தடை எதுவும் கிடையாது என சுட்டிக்காட்டியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்ததன் பின்னர் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்கள் யாருக்கு ஆதரவளிக்கின்றார்கள் என்பது விரைவில் தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love