Home இலங்கைஐ தே கவின் உறுப்பினர்களின் விசேட கலந்துரையாடல் ஸ்ரீகொத்தாவில்…

ஐ தே கவின் உறுப்பினர்களின் விசேட கலந்துரையாடல் ஸ்ரீகொத்தாவில்…

by admin

ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களின் விசேட கலந்துரையாடல் ஒன்று தற்போது கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் முடிவுகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்கள் தொடர்பாகவும், இதன்போது கலந்துரையாடல் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதேவேளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில், அலரிமாளிகையில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுடனான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று பிற்பகல் வேளையில், முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், இதன்போது, நாடாளுமன்ற அலுவல்கள் குறித்தும் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More