Home இலங்கைதேசிய நல்லாட்சி அரசாங்கம் தொடரும் – மைத்திரி ரணில் மீண்டும் நெருக்கம்….

தேசிய நல்லாட்சி அரசாங்கம் தொடரும் – மைத்திரி ரணில் மீண்டும் நெருக்கம்….

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

ஜனாதிபதி மைத்திரிபாலசிரிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இணைப்பில் தற்போது  நிலவும்  நல்லாட்சி அரசாங்கத்தை முன்னெடுப்பதே ஜனாதிபதியுடனான இன்றைய சந்திப்பில் எட்டப்பட்ட இறுதித் தீர்மானமென ஐக்கியதேசியக் கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில்  பிரதமர் தெரிவித்ததாக அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

பிரதமர் பதவி தொடர்பிலும் நல்லாட்சி அரசாங்கத்தின் எதிர்கால நடடிவக்கைகள் தொடர்பிலும் ஜனாதிபதியுடன் பேசுவதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோர் இன்று இரவு 6.30 மணியளவில் ஜனாதிபதி மாளிகைக்கு சென்றிருந்தனர்.

இதனையடுத்து ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தைகளை முடித்துக்கொண்ட பிரதமர், ஜனாதிபதியுடன் பேசி எடுக்கப்பட்ட தீர்மானங்களை, அலரி மாளிகையில் இருந்து  ஐ.தே.க.வின் பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் பிரதமர் அறிவித்தார்.

இக் கூட்டத்திலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நல்லாட்சி அரசாங்கத்தை முன்கொண்டு செல்வதே தமதும் ஜனாதிபதியினதும் இறுதித் தீர்மானமாக அமைந்ததாக  அமைச்சர் சுஜீவசேனசிங்க  குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More