Home இலங்கை இலங்கை குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் அதி­ருப்­தியை வெளியிடுவார்?

இலங்கை குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் அதி­ருப்­தியை வெளியிடுவார்?

by admin

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வை யின் 37 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 26ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 23ஆம் திக­தி­வரை நடை­பெ­ற­வுள்ள நிலையில் முதல்நாள் அமர்வில் ஐக்கிய நாடுகள் செய­லாளர் நாயகம் அன்­டோ­னியோ குட்டரஸ் மற்றும் ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் {ஹசேன் ஆகியோர் இலங்கை தொடர்பில் சில விட­யங்­களை முன்­வைப்­பார்கள் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இம்­முறை கூட்டத் தொடரில் இலங்கை தொடர்­பான இரண்டு விவா­தங்கள் நடை­பெ­ற­வுள்­ள­துடன் இலங்கை குறித்து பல்­வேறு அறிக்­கை­களும் தாக்கல் செய்­யப்­ப­ட­வுள்­ளன.

இலங்கை தொடர்­பான விவா­தத்­தின்­போது ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செயிட் அல் ஹூசைன் இலங்கை தொடர்­பான தனது அறிக்­கையை வெ ளியி­ட­வுள்­ள­துடன் அதில் அவர் தனது அதி­ருப்­தியை வெ ளியி­டுவார் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

செய்ட் அல் {ஹசேனின் இலங்கை குறித்த மீளாய்வு அறிக்­கையை தொடர்ந்து இலங்கை அர­சாங்­கத்தின் சார்பில் அறிக்கை ஒன்று முன்­வைக்­கப்­ப­ட­வுள்­ளது. இதன்­போது வெளி­வி­வ­கார அமைச்சர் இலங்­கையின் சார்பில் அறிக்­கையை முன்­வைப்பார் என்­ப­துடன் இலங்­கை­யா­னது ஜெனிவா பிரே­ர­ணையை எவ்­வாறு அமுல்­ப­டுத்­து­கின்­றது என்­பது குறித்து விளக்­க­ம­ளிக்­க­வுள்ளார்.

இதேவேளை இலங்கை குறித்த ஜெனிவா பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்டு மூன்று வரு­டங்கள் கடந்­து­விட்ட போதிலும் பொறுப்­புக்­கூறல் பொறி­முறை விட­யத்தில் இது­வரை சரி­யான முன்­னேற்றம் காணப்­ப­ட­வில்லை என ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் {ஹசேன் கடும் அதி­ருப்­தியை வெளியி­ட­வுள்­ள­துடன் பாரிய அழுத்­தங்­களை பிர­யோ­கிக்­க­வுள்­ள­தாகவும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

கடந்த 2015 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் அமெரிக்கா உள்ளிட்ட ஐந்து நாடுகளினால் இலங்கை குறித்த பிரேரணை கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More