Home இலங்கைஜனாதிபதிக்கும் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை

ஜனாதிபதிக்கும் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது. ஜனாதிபதி செயலகத்தில் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது. நாட்டில் நிலவி வரும் அரசியல் நிலைமைகள் குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது

பிரதமர் பதவியில் மாற்றம் இருக்காது என ஜனாதிபதி நேற்று இரவு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு உறுதிமொழி வழங்கியுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறெனினும் அரசாங்க் தொடர்பிலான ஜனாதிபதியின் திடமான நிலைப்பாடு இதுவரையில் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More