குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு
அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சொத்து விபரங்களை ஒப்படைக்கத் தவறியதாக ஜொன்ஸ்டன் மீது குற்றம் சுமத்தப்பட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடிப்படையில் ஜொன்ஸ்டன் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள நீதிமன்றம் தடை விதித்திருந்தது. 2010ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் சொத்து விபரங்களை ஒப்படைக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள அனுமதிக்குமாறு ஜொன்ஸ்டன் விடுத்த கோரிக்கை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள அனுமதியளித்துள்ளது. இந்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய இந்த அனுமதியை வழங்கியுள்ளார்.