Home இந்தியாசிறுமி ஹாசினியை பலாத்காரம் செய்து எரித்து கொலை செய்த தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை

சிறுமி ஹாசினியை பலாத்காரம் செய்து எரித்து கொலை செய்த தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை

by admin


சென்னையில் சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்த்தை குற்றவாளி என உறுதி செய்த செங்கல்பட்டு நீதிமன்றம் அவருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது . கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் அயல் வீட்டை சேர்ந்த 6 வயது சிறுமி ஹாசினியை பாலியல் பலாத்காரம் செய்ததுடன் சிறுமியை கொலை செய்து விட்டு உடலை எரித்திருந்தார்.

இந்த வழக்கில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் அவரது தாயையும் கொலை செய்திருந்தார். இந்த நிலையில் மீளவும் கைது செய்யப்பட்ட மீதான ஆள்கடத்தல், பலாத்காரம், கொலை உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து நீதிபதி வேல்முருகன் இன்று தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More