குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஈழக் கோரிக்கையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கவில்லை. ஒன்றிணைந்த இலங்கைக்குள் அதிகபட்ச அதிகாரப் பகிர்வையே நாம் கோரிநிற்கிறோம். இவற்றை மீறி ஈழம் பிறக்குமாயின் அது மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்திலேயே பிறக்கும் என எதிர்கட்சித் தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா சம்பந்தன் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் மிகவும் கீழ்த்தரமாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவும் அவரது பொதுஜன முன்னணியும் பிரச்சாரம் செய்திருந்தார்கள். அரசாங்கத்திற்கும், ஐக்கியதேசியக் கட்சிக்கு அளிக்கும் வாக்குகள் ஈழம் உருவாக வழிவகுக்கும் என அப்பாவிச் சிங்கள மக்களை மகிந்த ராஜபக்ஸ வழிநடத்தி இருந்தார்.
இது மிகவும் தவறானதும் பிiழையானதுமான முன்னுதாரணம் ஆகும் எனத் தெரிவித்த இரா சம்பந்தன் இப்படியாக சாதாரண சிங்கள மக்களை ஏமாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என பாராளுமன்றில் எச்சரித்துள்ளார்.