இருபதுக்கு இருபது போட்டியில் 134 பந்துகளை பிடித்ததன் மூலம் மகேந்திர சிங் டோனி, இலங்கை முன்னாள் வீரர் குமார் சங்ககராவின் சாதனையை முறியடித்துள்ளார். இந்தியா – தென்ஆபிரிக்கா அணிகளுக்கிடையில் நடைபெற்றுவரும் இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடரின் நேற்றைய முதல் போட்டியில் இந்தியா 28 ஓட்டவித்தியாசத்தில் வெற்றியீட்டியிருந்தது.
இந்தப் போட்டியின் போது புவனேஸ்வர் குமார் வீசிய பந்தை ஹென்றிக்ஸ் அடித்தபோது மேல்நோக்கி சென்ற பந்தினை டோனி பிடித்திருந்தார். இதன்மூலம் இருபதுக்கு இருபது போட்டியில் 134 பந்துகளை பிடித்து சங்ககராவின் சாதனையை முறியடித்தார்.சங்ககரா 254 போட்டிகளில் 134 பிடிகளை பிடித்துள்ளார். டோனி 275 போட்டிகளில் 135 பிடிகளை பிடித்து சாதனைப் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.