Home இலங்கை 2ஆம் இணைப்பு – யாழ்ப்பாணத்தில் இருந்து தியத்தலாவ நோக்கிச் சென்ற பேருந்தில் குண்டுவெடிப்பு – படைவீரர்களுக்கும் காயம்…

2ஆம் இணைப்பு – யாழ்ப்பாணத்தில் இருந்து தியத்தலாவ நோக்கிச் சென்ற பேருந்தில் குண்டுவெடிப்பு – படைவீரர்களுக்கும் காயம்…

by admin

பயணிகள் பேருந்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்திற்கு குண்டொன்று வெடித்ததே காரணம் என இராணுவத் தளபதி தனக்கு அறிவித்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் கூறியுள்ளார். கஹகொல்ல பிரதேசத்தில் தனியார் பேருந்து ஒன்றில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் ஏற்பட்ட இந்த வெடிப்பு சம்பவத்தில் பெண்கள் உட்பட 19 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் 07 இராணுவ வீரர்கள், 05 விமானப்படை வீரர்கள் மற்றும் 07 பொது மக்களும் அடங்குவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார். காயமடைந்தவர்களில் இருவருடைய நிலமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வெடிப்பு சம்பவம் காரணமாக பேருந்து முழுமையாக தீப்பற்றி எரிந்துள்ளது. எவ்வாறாயினும் இந்த வெடிப்பு சம்பவம் பயங்கரவாதத் தாக்குதல் அல்ல என்று இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க கூறியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து தியத்தலாவ நோக்கிச் சென்ற பேருந்து நேற்று இரவு பண்டாரவளை வரையில் வந்து, பின்னர் அதில் இருந்த பயணிகள் மற்றொரு பேருந்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். இவ்வாறு பயணிகள் மாற்றப்பட்ட பின்னர் பேருந்து கஹகொல்ல நோக்கி புறப்படும் போது இன்று அதிகாலை 5.30 மணியளவில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

 

தியதலாவையில் பேருந்து தீ விபத்து – ராணுவத்தினர் உட்பட 19 பேர் காயம்

Feb 21, 2018 @ 03:20


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பண்டாரவளை தியதலாவ பிரதேசத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் 19 பேர் காயமடைந்துள்ளனர். தியதலாவ கஹாகொல்ல என்னும் இடத்தில் இந்த விபத்து இடம்பெற்றிருந்தது. இந்த விபத்தில் காயமடைந்தவர்களில் 12 பேர் இராணுவப் படையினர் என்பது குறிப்பிடத்தக்கது.

பேருந்தில் ஏற்பட்ட சிறு வெடிப்புச் சம்பவத்தினால் இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்தவர்கள் தியதலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More