வேகப்பந்து வீச்சாளர் ஷெஸான் மதுசங்க சுதந்திர கிண்ண இருபதுக்கு இருபது போட்டிகளில் விளையாமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஸ் அணியுடன் இடம்பெற்ற இறுதி இருபதுக்கு இருபது போட்டியின் போது ஏற்பட்ட உபாதை காரணமாக மதுசங்கவினால் சுதந்திர கிண்ண இருபதுக்கு இருபது போட்டிகளில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் எதிர்வரும் மார்ச் 8 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரையில் இப்போட்டிகள் நடக்கவுள்ளது. இப்போட்டியில் இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஸ் அணிகள் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.