Home இலங்கைஅவதூறு செய்திக்கு நடவடிக்கை இல்லை என யாழில் ஒருவர் தற்கொலை முயற்சி

அவதூறு செய்திக்கு நடவடிக்கை இல்லை என யாழில் ஒருவர் தற்கொலை முயற்சி

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறி ஒருவர் யாழில்.உள்ள பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு அலுவலகத்தில் தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது ,

யாழில்.இருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்றில் தன்னை பற்றி அவதூறு ஏற்படுத்தும் விதமாக செய்தி வெளியாகி உள்ளது என தெரிவித்து ஒருவர் யாழில்.அமைந்துள்ள பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு பல மாதங்கள் கடந்த நிலையிலும் , எந்த விதமான நடவடிக்கையும் பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு எடுக்கவில்லை என்றும் , குறித்த செய்தியினால் தான் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் , அதனால் குடும்பத்தில் பிரிவு ஏற்பட்டு உள்ளதாகவும் தெரிவித்து இதற்கு மேல் தான் உயிருடன் வாழ விரும்பவில்லை என தெரிவித்து தன் வசம் வைத்திருந்த மண்ணெண்ணெயை ஊற்றி தீ மூட்ட முயற்சித்துள்ளார்.

அதன் போது அங்கிருந்தவர்கள் தற்கொலை முயற்சி மேற்கொண்டவரை காப்பாற்றி சம்பவம் தொடர்பில் யாழ்.காவல்துறையினருக்கு அறிவித்ததனைத் தொடர்ந்து காவல்துறையினர் குறித்த நபரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.
00000

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More