குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
மீனவர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.ஆழ் கடல் மீன்பிடியினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை இந்தியா புரிந்து கொண்டுள்ளதாகவும் இரண்டு தரப்பினரும் இணக்கப்பாட்டின் அடிப்படையில் தீர்வுத் திட்டமொன்றை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வறிய மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டியது அவசியமானது எனவும் அண்மையில் மீனவர் பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த இந்தியாவிற்கு மேற்கொண்ட விஜயம் வெற்றியளித்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் சீனா மிக நெருங்கிய நட்பு நாடு என தெரிவித்துள்ள அவர் அண்மையில் சீனத் தூதுவர் வெளியிட்ட கருத்து குறித்து, தூதுவருடன் பேசியதாகவும் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் வெளிவிவகார அமைச்சுடன் தீர்த்துக்கொள்ளுமாறும் ஊடகங்களின் ஊடாக பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது எனவும் தாம் தூதுவருக்கு ஆலோசனை வழங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.