குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
முஸ்லிம்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகளின் வரிசையில் இலங்கையின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அண்மையில் சர்வதேச மன்னிப்புச் சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் பௌத்த தேசியவாத கொள்கைகள் கடந்த ஆண்டில் வலுப்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்ட்டுள்ளது.
கடந்த ஆண்டில் உலக நாடுகளில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறுபான்மை இனத்தவர்களுக்கு மிகவும் ஆபத்தான பிராந்தியங்களில் ஒன்றாக தெற்காசியா கருதப்படுகின்றது. அரசாங்கங்கள் உரிய வகையில் சிறுபான்மை மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பூசாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ரோஹினிய முஸ்லிம்கள் மீது பௌத்த கடும்போக்காளர்கள் தாக்குதல் நடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.